துஷார் ரஹேஜா விளாசல்: திருச்​சி சோழாஸை வீழ்த்​திய திருப்​பூர் தமிழன்ஸ் அணி | Tushar Raheja strikes for Tiruppur Tamizhans defeated Trichy Cholas

Share

சேலம்: டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ஐட்​ரீம் திருப்​பூர் தமிழன்ஸ் அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்​தி​யது.

இந்த லீக் ஆட்​டம் சேலம் எஸ்​சிஎப் கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய திருச்சி சோழாஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 164 ரன்​களைக் குவித்​தது.

அந்த அணி வீரர் சஞ்​சய் யாதவ் 32 பந்​துகளில் 5 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​களு​டன் 60 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். சுஜாய் 37, சுரேஷ் குமார் 3, வசீம் அகமது 3, ஜே கவுசிக் 15, யு.​முகிலேஷ் 23, ஜபார் ஜமால் 17 ரன்​கள் எடுத்​தனர். திருப்​பூர் தமிழன்ஸ் அணி சார்​பில் மோகன் பிர​சாத் 2 விக்​கெட்​களை​யும், டி. நடராஜன், சிலம்​பரசன், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

பின்​னர் 165 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய திருப்​பூர் தமிழன்ஸ் அணி 18.5 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 165 ரன்​கள் குவித்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது.

திருப்​பூர் அணி​யின் விக்​கெட் கீப்​ப​ரான துஷார் ரஹேஜா அதிரடி​யாக விளை​யாடி 36 பந்​துகளில் 80 ரன்​கள் குவித்​தார். அவரது ஸ்கோரில் 8 பவுண்​டரி​கள், 6 சிக்​ஸர்​கள் அடங்​கும். அமித் சாத்விக் 5, டேரில் பெராரியோ 1, பிரசோத் ரஞ்​சன் பால் 42, முகமது அலி 25 ரன்​கள் எடுத்​தனர்.

திருச்சி அணி சார்​பில் கே.ஈஸ்​வரன் 2 விக்​கெட்​களை​யும், சஞ்​சய் யாதவ் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். அதிரடி​யாக விளை​யாடி அணிக்​கு வெற்​றி தேடித்​ தந்​த ரஹேஜா ஆட்​ட​நாயக​னாக அறிவிக்​கப்​பட்​​டார்​.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com