இது போன்ற கேமராக்கள் `Amazon.co.uk’ தளத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமேசான் பக்கத்தில், ஆடை ஹூக் கேமராவின் புகைப்படங்கள் குளியல் அறையிலும், படுக்கை அறையிலும் காட்டப்படுகின்றன. அலாரம் கடிகாரத்தில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள், படுக்கையில் இருக்கும் தம்பதியினரின் போனில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் இருக்கிறது.
யு.எஸ்.பி சார்ஜரில் மறைக்கப்பட்ட கேமராவின் புகைப்படங்கள் ஒரு ஜோடி கட்டியணைத்தபடி இருக்கும் படத்தைக் காட்டும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஷவர் ரேடியோவில் மறைக்கப்பட்ட பாத்ரூம் ஸ்பை கேமராவில் இது சிஐஏ-விற்கு பயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற கேமராக்களின் விளம்பரங்கள் சர்ச்சைக்குரிய வகையில் அமேசானில் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
`பார்ட்னர்களை வேவு பார்ப்பது அல்லது வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களைக் கண்காணிப்பதற்காக மறைக்கப்பட்ட கேமராக்களை பலர் பயன்படுத்துகின்றனர். இந்த கேமராக்களின் பயன்பாடு சிக்கலானதாக இருக்கலாம்.
பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிராகப் பெரும்பாலும் இந்தக் கருவிகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை இந்தப் பயன்பாடுகள் விளக்குகின்றன” என்று லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் பேராசிரியர் லியோனி டான்சர் கூறியுள்ளார்.
“பல கேமராக்கள் குழந்தைகளைக் கண்காணிக்க பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், கேமராக்களை தவறாகப் பயன்படுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது” என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.