துணிவு Vs வாரிசு: அஜித், விஜய் ரசிகர்கள் இடையே காவிய மோதல் நடக்குமா?

Share

அஜித் விஜய்

அஜித் நடிக்கும் துணிவு படமும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படமும் பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியிருப்பதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருப்பதோடு, ட்விட்டரிலும் மோதத் தொடங்கியிருக்கிறார்கள்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் திரைப்படம் இது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கும் நிலையில், மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானபோது, #துணிவு என்ற ஹாஷ்டாகை அஜித் ரசிகர்கள் இரண்டு நாட்களுக்கு ட்ரெண்ட் செய்தனர். இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், மதுரையில் இருந்த அஜீத் ரசிகர்கள் இப்போதே போஸ்டர்கள் அடித்து ஒட்ட ஆரம்பித்தனர். ட்விட்டரில் #ThunivuPongal2023 என்ற ஹாஷ்டாகையும் ட்ரெண்ட் செய்தனர்.

அதேபோல, இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருப்பதால், அந்தப் படமும் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் தவிர, பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com