தீ இது தளபதி..! திருச்சியை கலக்கும் விஜய் தீம் ரெஸ்டாரண்ட்.. அப்படி இங்க என்ன ஸ்பெஷல்?

Share

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு அருகில் உள்ள தளபதி தந்தூரி என்னும் இந்த கடையை சுமார் 2 வருடங்களுக்கு மேலாக நடத்தி அசத்தி வருகிறார் பவித்ரன். இந்த இளைஞரும், அவருடைய தோழியும் சேர்ந்து 4 வருடங்களாக ஒரு கடை திறக்க வேண்டும் என்று முயற்சியில் இருந்தனர். எந்த மாதிரியான பெயர்களை கொண்டு கடை திறந்தால் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று குறிக்கோளுடன் இருந்தனர்.

இருவரும் நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் என்பதால் தளபதியின் பெயரிலே கடைத்திருக்கலாம் என்று முடிவு செய்தனர். தற்போது அந்த கடைக்கு தளபதி தந்தூரி என்றும் பெயர் வைத்து கடை முழுவதும் விஜயின் புகைப்படங்கள் கடைகளில் வால்போஸ்டர் முழுவதும் விஜய் உருவப்படங்கள் வரையப்பட்டு கடைக்கு உள்ளே வருபவர்கள் எங்கே பார்த்தாலும் விஜய் மட்டுமே அவர்கள் கண்களுக்கு தெரியும் படி வைத்துள்ளார்.

திருச்சியில் உள்ள விஜய் தீம் ரெஸ்டாரண்ட்

கடை உள்ளே வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார்போல் விஜயின் அசத்தலான பாடல்களும், இசைகளும் ஓலித்துக்கொண்டே இருக்கும். கடைக்கு உள்ளே வரும் வாடிக்கையாளர்கள் ஆடிக்கொண்டே வருவது வழக்கமாக உள்ளது. இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் உணவுகளின் பெயர்கள் கூட விஜய் ஸ்டைலில் தான் இருக்கும் உதாரணத்திற்கு குருவி பிட்சா, லியோ பிட்சா, கலர் கலர் கப் ஐஸ் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

வித்தியாசமான முயற்சியில் தொழிலை தொடங்கிய இளைஞரின் செயலை கண்டு அனைவரும் வியப்புடன் கடைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த உணவகம் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்குகிறது. நீங்க தளபதி விஜய் fan…ஆ கண்டிப்பா இந்த உணவுகள try பண்ணுங்க.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com