கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு முன்னேற்றத்தை எதிர்பாருங்கள் அல்லது சாக்கு போக்கு கூறுங்கள் என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார் கோலி. இந்த ஒர்க் அவுட் வீடியோவில் காலுக்கு வலிமை அளிக்கும் லஞ்சஸ் ஒர்க் அவுட்டை கோலி மேற்கொள்கிறார். வீடியோவை பார்க்க…
இந்த வீடியோவிற்கு கோலியின் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து கமென்ட் செய்துள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் விராட் கோலியின் டெடிகேஷனை பாராட்டலாம், அடுத்த இலக்கு உலகக்கோப்பைதான் என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
Look for excuses or look to get better. pic.twitter.com/qbTmcNlGfR
— Virat Kohli (@imVkohli) June 19, 2023
Fitness freak 🥵🤌 #ViratKohli pic.twitter.com/dLWuBrqfq5
— Hail Virat Kohli 🐐 (@HailViratKohli) June 19, 2023
This Virat Kohli >>> pic.twitter.com/r1TGwHa63k
— Anant Kashyap (@theanantkashyap) June 19, 2023
இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் விதமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.