தீபாவளிக்கு இந்த தேங்காய் லட்டு செய்து பாருங்க.. ஒன்று கூட மிச்சம் இருக்காது.. ரெசிபி இதோ…

Share

பொதுவாக லட்டு என்றாலே வீட்டில் பூந்தியை பயன்படுத்திதான் செய்வார்கள். நீங்களும் அதைதான் எப்போதும் செய்கிறீர்கள் எனில் இந்த முறை வித்தியாசமான சுவைக்கு இந்த தேங்காய் லட்டு டிரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

2 கப் துருவிய தேங்காய்

பால் – 1/2 லிட்டர்

ஏலக்காய் தூள் – ஸ்பூன்

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் பால் சேர்த்து நன்கு கிளறவும்.

20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் சர்க்கரை சேர்த்து வாணலியை ஒரு மூடியால் மூடி வைக்கவும். பின்னர் ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.

இப்போது உங்கள் கைகளில் சிறிது நெய் தடவி, கலவையிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உருட்டவும்.

பாதுஷா இல்லாமல் தீபாவளி பலகாரமா..? உங்களுக்கான ரெசிபி இதோ…

ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைப் பயன்படுத்தி சம அளவிலான லட்டுகளை உருவாக்கலாம். அனைத்து கலவையையும் பயன்படுத்தி இதுபோன்ற லட்டுகளை உருவாக்கவும்.

லட்டுகளுக்கு கூடுதல் அமைப்பை சேர்க்க அவற்றை எடுத்து தேங்காய் துருவலில் லேசாக உருட்டலாம். நீங்கள் விருப்பப்பட்டால் முந்திரி கொண்டு லட்டுகளை அலங்கரித்து பரிமாறலாம்.

இந்த லட்டுகளை தயார் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

 

 

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com