திரை உலகம்: இந்த வார படங்கள், சீரீஸ்கள் என்னென்ன?

Share

லைகர்

பட மூலாதாரம், DHARMA PRODUCTIONS

கடந்த சில வாரங்களோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள், சீரிஸ்களின் பட்டியல்:

விஜய் தேவரகொண்டா நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். மிகப் பெரிய குத்துசண்டை வீரனாக விரும்பும் கதாநாயகன், தன் காதலிக்காக தன்னுடைய மானசீக குருவுடனேயே சண்டைபோட நேர்கிறது. நாயகன் தன் லட்சியங்களை அடைந்தானா என்பதுதான் கதை. இந்தப் படம் வியாழக்கிழமையன்றே வெளியாகிவிட்ட நிலையில், இந்தப் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.

டைரி ‘டி பிளாக்’, ‘தேஜாவு’ என தொடர்ந்து த்ரில்லர் படங்களிலேயே கவனம் செலுத்திவரும் அருள்நிதியின் அடுத்த படம் ‘டைரி’. இந்தப் படமும் த்ரில்லர்தான். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் வழியில் ஓரிடத்தில் தொடர்ந்து விபத்துகள் நடக்க, அதனைத் துப்பறிகிறார் கதாநாயகன். படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியிருக்கிறார். உண்மைக் கதையில் சற்று கற்பனை கலந்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com