திருவண்ணாமலையில் நடந்த 4 ஏடிஎம் கொள்ளையில் யாருக்கு தொடர்பு?

Share

ஏடிஎம் வங்கி கொள்ளை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த துணிகர சம்பவத்தில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்கள் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியுள்ளனர்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சம்பவ பகுதிகளை ஆய்வு செய்ய 5 தனிப் படைகளும், இதில் வெளி நபர்களுக்குத் தொடர்பு இருப்பதால் மேற்கொண்டு 3 தனிப்படைகளும் என மொத்தம் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திருட்டு திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் வங்கி கிளை, தேனிமலை பகுதியில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை, போளூர் பஸ் ஸ்டாண்டில் அருகே அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் வங்கி மற்றும் கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் வங்கி ஆகிய நான்கு ஏடிஎம் மையங்களில் இந்த கொள்ளை நடந்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com