சீனாவில் கடந்த ஆண்டு முதன்முறையாகப் பிறப்பு எண்ணிக்கையைவிட, இறப்புகள் அதிகரித்துள்ளன. சீனாவில் 60 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு கடந்த ஆண்டு, மக்கள் தொகை குறைந்துள்ளது. மக்கள் தொகையை ஈடுகட்ட அந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாணத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் ஜோடிகள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் வரம்பு இருக்காது. ஒருவர் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது அம்மாகாண அரசு.
சீன அதிபர் ஜி ஜின்பிங் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளார். வீழ்ச்சி விகிதங்களை மாற்றியமைக்க அல்லது குறைக்க அரசாங்கம் வரிச் சலுகைகளையும் சிறந்த மகப்பேறுகால சுகாதாரத்தையும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.