திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கு: சாதி சர்ச்சை குறித்த வழக்கில் ஐகோர்ட் புதிய உத்தரவு

Share

'சாதியை அரசே பெருமைப்படுத்தக் கூடாது' - திருப்போரூர் கந்தசாமி கோவில் வழக்கில் நீதிமன்றம் கூறியது என்ன?

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“சாதியை ஒழிக்கும் முயற்சியில் அரசுத் துறைகள் ஈடுபாடு காட்ட வேண்டுமே தவிர அதை நிலைநிறுத்தும் வகையில் செயல்படக் கூடாது” என்று கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்தது.

திருப்போரூர் கந்தசாமி கோவில் திருவிழா அழைப்பிதழில் சாதி அடையாளத்துடன் உபயதாரர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கில், “இந்து சமய அறநிலையத்துறை நடத்தும் திருவிழாவில் சாதியைப் பெருமைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது” என, நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஆனால், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை புறநகர் பகுதியான திருப்போரூரில் மிகப் பழமையான கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிதம்பர சுவாமிகள் என்பவரால் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக, இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com