திருப்புவனம் கோயில் காவலாளி வழக்கு: காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது? சகோதரர் அளித்த முழு விவரம்

Share

காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்
படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமாரும், அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவமும்

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
காவல்நிலைய மரணங்கள், மனித உரிமை மீறல்கள், காவல் நிலைய வன்முறைகள், தமிழ்நாடு, முக ஸ்டாலின், மானாமதுரை, சிவகங்கை, அஜித்குமார்
படக்குறிப்பு, உயிரிழந்த காவலாளி அஜித் குமார்

திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த 6 காவலர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.

கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயி​ரிழந்​தார் என்பது குற்றச்சாட்டு. திருப்புவனம் காவல் நிலையத்தை மடப்புரம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

உயிரிழந்த அஜித்குமாருக்கு போலீஸ் காவலில் என்ன நடந்தது?அவருடன் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த அவரது சகோதரர் நவீன் குமார் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

10 பவுன் நகை திருடு போனதாக புகார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com