முன்னதாக நேற்று இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிராணம்பிகை அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு கோபுர தரிசனம் அளித்தார். மேலும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை செய்விக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர மற்றும் ஸ்ரீ பிராணாம்பிகை அம்பாள் வீதி உலா நடைபெற்றது.