திருச்சி சிவா எம்.பி: “சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை” –

Share

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com