சிறுதானியங்களில் காரம், இனிப்பு, மெயின் கோர்ஸ், ஸ்நாக்ஸ் என ஆரோக்கிய உணவுகளும், ’சண்டே போட்டி வைத்தால் அசைவ உணவுதான் சமைப்போம்’ என வித விதமான பிரியாணிகள், அரைத்து வைத்த குழம்பு வகைகள் எனவும், ’தலைமுறை தலைமுறையாக நாங்கள் இந்த உணவை எங்கள் வீட்டு மெனு கார்டில் இருந்து எடுக்க மாட்டோம்’ ரக உணவுகளையும், இன்னும் பாரம்பர்ய உணவுகள், ஊர் சார்ந்த உணவுகள், புதியதாக செய்ய வேண்டும் என்ற புது முயற்சி உணவுகள் என உணவுகளின் பட்டியல் நீண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நடைபெறும் இந்த சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 80 வயது வரை பலரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். நடுவர் செஃப் தீனா ஒவ்வொரு போட்டியாளரின் உணவையும் ருசிபார்த்து மதிப்பெண் அளித்து வருகிறார்.
காலை 10 மணிக்கு ஆரம்பித்த போட்டி தற்போது வரை நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 10 போட்டியாளர்கள் அரங்கில் சமைக்க வேண்டும், அந்த 10 போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.