திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார், இந்நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி அடுத்து யாருக்கு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு திமுகவினர் இடையே எழுந்துள்ளது.
திமுகவை பொருத்தவரையில் தற்போதுள்ள துணைப் பொதுச் செயலாளர்களின் தாழ்த்தப்பட்டோர் பொது மற்றும் பெண் என வழங்கப்பட்டுள்ளது.அதில் பெண் உறுப்பினரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அந்த இடத்திற்கு மீண்டும் ஒரு பெண் நிர்வாகியை துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டிய சூழலில் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ள நிலையில், அந்த இடத்தில் திமுகவின் மகளிர் அணி செயலாளருமட் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியை நியமிக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களிலும் திமுகவின் கட்சி தலைமைக்கும் கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருக்கின்றனர்.
Also Read : துணைப் பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை முடிவு?
மகளிர் அணி பொறுப்பை வைத்திருக்கும் கனிமொழி கருணாநிதி துணைப் பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்க வேண்டும் மகளிர் அணியும் கூடுதலாக கவனிக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
கனிமொழியின் ஆதரவாளர்கள் தங்களது கோரிக்கையை தலைமைக்கு நேரடியாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் கோரிக்கைகள் வைத்து வரும் சூழலில் திமுக தலைமையும் இது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கனிமொழிக்கு இந்த பொறுப்பை கொடுக்கும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை சந்திக்க வேண்டும் என்ற காரணத்தினால் வேறு யாருக்காவது கொடுப்பதற்கான ஆலோசனையிலும் தலைமை ஈடுபட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதில் முக்கியமாக திமுகவின் கொள்கை பரப்பு இணைச்செயலாளருமான புதுக்கோட்டை விஜயாவை நியமனம் செய்வதற்கு திமுக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.. ஏற்கனவே அடுத்த துணைப் பொதுச் செயலாளர் யார் என்ற பட்டியலில் பூங்கோதை ஆலடி அருணா, டாக்டர் கனிமொழி சோமு உள்ளிட்டவரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் , அடுத்த துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதியா? புதுக்கோட்டை விஜயாவா என்பது இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.