சென்னை: திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமையில் பொது செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் ஜெ.ஹாஜா கனி, துணை பொது செயலாளர் பி.எஸ்.ஹமீது, நிர்வாக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.ஹனிபா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உடனிருந்தனர்.