திடீரென பார்வை மங்குகிறதா? வறட்சி முதல் மூளைக்கட்டி வரை எதுவும் காரணமாகலாம்| கண்கள் பத்திரம்-20 | Causes of Suddenly blurred vision

Share

அடிபட்டதன் விளைவாகவோ, கண்களில் மோசமான ஏதேனும் ஒரு பொருள் பட்டதாலோ கண்களின் திசுக்கள் வீங்கலாம். கான்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே தூங்குவது, லென்ஸை முறையாக சுத்தப்படுத்தாமல் உபயோகிப்பது போன்றவை கண்களை பாதித்து, மங்கலான காட்சிகளுக்குக் காரணமாகலாம்.

நோய் எதிர்ப்பாற்றலுடன் தொடர்புடைய சொரியாசிஸ், இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பாதிப்புகளும் பார்வையை பாதிக்கலாம். எனவே, இவற்றுக்கான அறிகுறிகளை உணர்ந்தால் முறையான மருத்துவரிடம் சரியான சிகிச்சைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

கண் வீக்கம்

கண் வீக்கம்

காட்சிகள் மங்கலாகத் தெரிவது மட்டுமன்றி, களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்கிறீர்களா? உங்களுடைய ரத்த அழுத்தம் குறைந்து, உடலில் நீர்ச்சத்தும் வறண்டு போயிருக்கலாம். சில வகையான சிகிச்சைகள், இதய பாதிப்புகள், ஊட்டச்சத்தில்லாத உணவுகள், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உண்டாகி, அதன் விளைவாக பார்வை மங்கலாம். வேறு காரணங்கள் இல்லாமல் திடீரென பார்வை மங்குவதாக உணர்ந்தால் ரத்த அழுத்த அளவை சரிபாருங்கள்.

காட்சிகள் மங்குவதோடு கண்கள் சிவந்திருந்தாலோ வலியை உணர்ந்தாலோ உங்களுக்கு `ஆங்கிள் க்ளோஷர் கிளாக்கோமா’ எனப்படும் கண் அழுத்த பாதிப்பு இருக்கலாம். இது மிக வேகமாகத் தீவிரநிலையை அடையும் பிரச்னை என்பதால் உடனே மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம். ‘ஓப்பன் ஆங்கிள் கிளாக்கோமா’ வகை கண் அழுத்த பாதிப்பானது பரவலாக பாதிக்கக்கூடியது. அது மெதுவாகத்தான் தீவிரமடையும்.

கண் அழுத்த நோய் பாதித்தால், அது பார்வை நரம்பை பாதிக்கும் என்பதால் பார்வையைத் திரும்பப் பெறுவது சிரமம். எனவே, குறிப்பிட்ட இடைவெளிகளில் கண் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் கண் அழுத்தத்தை அறிந்து அது பார்வையிழப்பில் முடிவதைத் தவிர்க்கலாம். கண் அழுத்த அளவைப் பொறுத்து, கண்களுக்கான டிராப்ஸ் முதல் அறுவை சிகிச்சை வரை மருத்துவர் பரிந்துரைப்பார். மங்கலான பார்வையும் இதில் ஓர் அறிகுறி என்பதால் அலர்ட்டாக இருப்பது அவசியம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com