திடீரென அதிகரித்த ஃபேளேவர்டு ஆணுறைகள் விற்பனை; வெளிவந்த அதிர்ச்சியான காரணம்! I Strange addiction – Flavoured condoms being used by youth as drugs

Share

மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர் பகுதியில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் (Flavoured Condoms) கடந்த வாரங்களை விட திடீரென அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மருந்தக உரிமையாளர் ஒருவர் சந்தேகம் கொண்டுள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளுக்கு, துர்காபூர் சிட்டி சென்டர், பிதான் நகர், பெனாசிட்டி மற்றும் முச்சிபாரா, சி மண்டலம், ஏ மண்டலம் போன்ற பகுதிகளில் கடும் தட்டுப்பாடும் நிலவி உள்ளது.

சந்தேகத்தின் அடிப்படையில், சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் வாங்குவோரை, அவர் கவனிக்கத் தொடங்கி உள்ளார். சுவையூட்டப்பட்ட ஆணுறைகளை வாங்க மருந்தகத்திற்கு வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, கொதிநீரில் சுவையூட்டப்பட்ட ஆணுறைகளை நீண்ட நேரம் ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் சுமார் 10 மணி நேரம் வரை போதை உச்சத்துடன் இருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மருந்தக உரிமையாளர், ‘துர்காபூரை சுற்றியுள்ள பகுதிகளில் முன்பு, நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு சுவையூட்டப்பட்ட ஆணுறைகளே விற்கப்பட்ட நிலையில், தற்போது, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுவது சந்தேகத்தை கிளப்பியது. அதன் அடிப்படையில், கடைக்கு ஆணுறைகள் வாங்க வந்தவர்களிடம் இது குறித்து விசாரித்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com