ராஜேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது, இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்கு கிடைத்தது.
தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால் ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கூறுகிறது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம், ‘பெண்கள் குடும்பத்துக்காக பல தியாகங்கள் செய்கின்றனர். பேறுகாலத்தில் பெண்கள் வேலையா, தாய்மையா என்று அலைக்கழிக்கப்படக்கூடாது. அவர்களுக்கு பேறுகால சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.