`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.
புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.
கேள்வி: டாக்டர், எனக்கு உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக, 38வது வாரத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். குழந்தை பிறந்த பிறகு, தாய்ப்பால் போதுமான அளவு சுரக்காத காரணத்தால், 5-வது நாளிலிருந்து, தாய்ப்பாலுடன் பவுடர் பாலையும் பாலாடையில் குழந்தைக்கு அளித்திட மருத்துவர் அறிவுறுத்தினார்; தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க ‘Domperidone’ என்னும் மருந்தையும் தொடங்கினார்.
தாய்ப்பால் சுரப்பினை அதிகரித்திடும் உணவுகள் என்ன? தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கவில்லை என்றால், பவுடர் பால் தான் தர வேண்டுமா? பசும்பாலை கொடுக்கக் கூடாதா? தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலிலுள்ள வேறுபாடுகள் என்ன?
கடந்த இரு அத்தியாயங்கள் மூலம், தங்களின் கேள்வியான தாய்ப்பால் அதிகரிக்கும் உணவுகள் குறித்து விரிவாக அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த அத்தியாயத்தில், தாய்ப்பால், பவுடர் பால் மற்றும் பசும்பாலில் உள்ள வேறுபாடுகளை விரிவாகக் காண்போம்.