தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த உணவுகளை அவசியம் எடுத்துக்கணும்… பச்சிளம் குழந்தை பராமரிப்பு –12

Share

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ் MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார்.

சென்ற அத்தியாயத்தில் தாய்ப்பால் சுரத்தலை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் குறித்து விரிவாகக் கண்டோம். அதன் தொடர்ச்சியை இந்த வாரமும் பார்ப்போம்…

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள்:

பாகற்காய்:

பாகற்காயில் உள்ள சேப்போனின்ஸ் (Saponins) மற்றும் டெர்பினாய்ட்ஸ் (Terpenoids) ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கக் கூடியதால், சர்க்கரைநோய் உள்ள தாய்மார்களுக்கு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவிடும். மேலும் தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலை:

பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள கறிவேப்பிலை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; இதயநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து காக்கிறது. கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள கறிவேப்பிலை, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது.

கறிவேப்பிலை:

தண்ணீர்:

தாய்ப்பாலில் அதிகளவு நீர் நிறைந்துள்ளதால், போதுமான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாவிட்டால், தாய்ப்பால் குறையக் கூடும். எனவே, குறைந்தது 2 லிட்டர் தண்ணீர், தினந்தோறும் குடிக்க வேண்டும்.

கொண்டைக்கடலை:

கொண்டைக் கடலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுந்துள்ளன. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

பால்:

பாலிலுள்ள கால்சியம், புரதம், கொழுப்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

சால்மன் மீன்:

சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம், புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் செலினியம் சத்துகள் நிறைந்துள்ளன. இதயநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து காத்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

தர்பூசணி:

தர்பூசணியில் தண்ணீர், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பார்லி:

பார்லியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் செலினியம் சத்துகள் நிறைந்துள்ளன. தினந்தோறும் பார்லி கஞ்சி குடித்து வர, உடல்பருமனைக் குறைக்கலாம். சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கக் கூடியது. இதயநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவல்லது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு:

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்துள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டீன் (β-Carotene) நிறைந்துள்ளதால், கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

பாதாம்:

பாதாம் பருப்பில் வைட்டமின் ஈ, மக்னீசியம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்துள்ளன. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது.

முருங்கைக்கீரை:

முருங்கைக்கீரையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் சி), இரும்பு, கால்சியம் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

பீட்ரூட்

பீட்ரூட்:

பீட்ரூட்டில ஃபோலிக் அமிலம் மிகுதியாக உள்ளது. இதயநோய், பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து உட்கொள்ளலாம். தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்கக்கூடியது.

பருப்புகள்:

பருப்புகளில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்துள்ளன. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவல்லது.

அடுத்த வாரம் தாய்ப்பாலுக்கும் பசும்பால், பவுடர் பால் போன்றவற்றுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி விரிவாகக் காணலாம்.

பராமரிப்போம்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com