தாமரை தண்டு வைத்து சூப்பர் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்யலாம்… இதோ ரெசிபி..!

Share

மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது என்ற குழப்பம்  எல்லா அம்மாக்களுக்கும் இருப்பது தான். குழந்தைகளுக்கு சாப்பிட சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அதேநேரம் ஆரோக்கியநமதாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு தான் ஒரு சுவையான ஸ்நாக் டைம் ரெசிபியை இன்று உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். பொதுவாக தாமரை மலரை குளங்களில் பூத்து பார்த்திருப்போம். இறைவனுக்கு  வைத்து பார்த்திருப்போம். ஆனால் அதன் தண்டை வைத்து சுவையான ஸ்னாக்ஸ் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போ தெரிஞ்சுக்கோங்க.

அதுவும் காரசாரமாக மொறுமொறுப்போடு சைனீஸ் ஸ்டைலில் செய்யும் உணவை பற்றி தான் சொல்ல இருக்கிறோம். பெரிய நகரங்களில் இப்போது தாமரைத் தண்டு தனியாக கிடைக்கிறது. இல்லை என்றாலும் நமது வீடுகளை சுற்றி உள்ள கோவில் குளங்களில் தாமரை செடிகளை பார்க்கலாம். அந்த தண்டுகளை வீட்டில் கொண்டு வந்து வைத்து வளர்க்கலாம்.

 தேவையான பொருட்கள்:

4 பேருக்கு: 

300 கிராம் தாமரை தண்டு

3 தேக்கரண்டி தேன்

1/2 தேக்கரண்டி தாய் சிவப்பு மிளகாய்

1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு

2 சின்ன வெங்காயம்

1 கைப்பிடி காஷ்மீரி சிவப்பு மிளகாய்

10 கிராம் இஞ்சி

1/2 தேக்கரண்டி எள் விதைகள்

1/2 கப்  எண்ணெய்

தேவைக்கேற்ப உப்பு

செய்முறை:

தாமரை தண்டுகளை நன்கு கழுவி தோலை உரிக்கவும். அதை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் கடைகளில்  உரித்து தண்டுகளாக வெட்டியே சிறிய பாக்கெட்டுகளில் போட்டு விற்பர். அது கூட பயன்படுத்தலாம்.

அவற்றை மெல்லியதாக வெட்டுவது முக்கியம். இல்லையேல் அவை மிருதுவாக மாறாது. வேகாமல் போகவும் வாய்ப்புள்ளது. தண்டு துண்டுகளை மென்மையாக்க, அவற்றை கொதிக்கும் நீரில் போட்டு 2 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து ஆறவைக்கவும்.

அவை ஆறும் நேரத்திற்குள் மற்றொரு பாத்திரத்தில், ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, முழு காஷ்மீரி சிவப்பு மிளகாயை போட்டு 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதிக்கும் முன் விதைகளை வெளியே எடுக்கவும் அல்லது அது மிகவும் காரமாக மாறும். பின்னர் அதை ஆறவைத்து அரைத்து  விழுதை தனியாக வைக்கவும். இஞ்சி, மற்றும் வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைக்கவும்.

இப்போது அடிப்படை வேலைகள் எல்லாம் முடிந்தது. அடுத்து பொரிக்கும் வேலை தான். ஒரு வாணலியை எடுத்து அதில் அரை கப் எண்ணெயை சூடாக்கவும். அதில் தாமரை தண்டுகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மேல் தோல் கொஞ்கம் மொறுமொறுப்பாகும் வரை மிதமான தீயில் பொறித்து எடுங்கள். மேலும் மொறுமொறுப்பு தேவை என்றால் கார்ன் மாவை தண்ணீரில் கலந்து அதில் தோய்த்து பொரித்து பாருங்க.

இதையும் பாருங்க: சீசன் முடிவதற்குள் வித்தியாசமான பலாப்பழ பிரியாணியை முயற்சி செய்து பாருங்க!

முடிந்ததும், வேறு பாத்திரம் அல்லது எண்ணையை வடித்து விட்டு அதே பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணையில் நறுக்கிய இஞ்சி வெங்காயத்தை சேர்த்து  15 விநாடிகள் வதக்கவும். அதில் 2-3 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து தீயை குறைத்து அதில் தேன் சேர்க்கவும். தண்ணீர் குறைந்தவுடன், அரைத்த மிளகாய் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். கொஞ்சம் கலந்தவுடன் வறுத்த தாமரை தண்டுகளை சேர்த்து கலக்கவும்.

இப்போது தேன் மிளகாயில் ஊறிய மிருதுவான தாமரை தண்டு பரிமாற தயாராக மாறிவிடும். அதன் மேலே எள், கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.மாலை பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதைக் கொடுத்துப்பாருங்க. சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். இப்போதே வீட்டில் செய்து பாருங்க…

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com