நாங்கள் தவறான விளம்பரங்கள் அல்லது பிரசாரங்களை செய்தால், நீதிமன்றம் கோடிக்கணக்கான அபராதம் விதித்தாலும் அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் எந்த ஆட்சேபனையும் இல்லை.
நாங்கள் பொய்ப் பிரசாரம் செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நூற்றுக்கணக்கான யோகா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், பஞ்சகர்மா, ஷட்கர்மா, நோன்பு மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்து குணப்படுத்தி இருக்கிறோம். பாரம்பர்ய சிகிச்சை பற்றிய ஆராய்ச்சிக்காக, உலகின் சிறந்த ஆயுர்வேத ஆராய்ச்சி மையம் எங்களிடம் உள்ளது. அதில் நூற்றுக்கணக்கான உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். செயற்கை மருந்துகளால் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஒப்புக்கொண்டாலும், குணப்படுத்த முடியாது என்று கூறுகிறது. ஆனால், யோகா – ஆயுர்வேதத்தில் அது போன்ற ஒரு பிரச்னை இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.