தளவாய்சுந்தரம் சஸ்பெண்ட் – RSS பேரணிக்கு கொடியசைத்ததுதான் காரணமா? உண்மை என்ன?

Share

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச்  செயலாளரும், எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியிருக்கிறார், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பொதுப்பணித்துறையின் முன்னாள் அமைச்சர், டெல்லிக்கான தமிழக அரசின் பிரதிநிதி, அதிமுக அமைப்புச் செயலாளர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றால், நிச்சயமாக அது சாதாரண காரணமாக இருக்குமா என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

தளவாய் சுந்தரம்  ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 6) கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியை, காவி கொடியசைத்து தொடங்கி வைத்ததுதான் காரணம் என தகவல் வெளியானது. ஆனால், உண்மை அதுவல்ல என்கிறார்கள், கட்சி வட்டாரங்கள்.

ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கி வைத்த தளவாய் சுந்தரம்

அப்படி என்ன விவகாரம் என்று விசாரித்தோம்…

அது, விசுவாசம் சார்ந்தது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலில் தளவாய் சுந்தரம் யார்? அவர் முதலில் யாருடைய விசுவாசி? கட்சியில் யாருடைய ஆதரவில் வளர்ந்தார்? போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், தளவாய் சுந்தரத்தை, எடப்பாடி பழனிசாமி தற்காலிகமாக நீக்கியதற்கு பின்னிருக்கும், காரணம் புரியும் என்கிறார்கள், நீக்கத்தால் குஷியில் இருக்கும் அதிமுக தரப்பினர். 

இவை எல்லாம் குறித்து, பின்வரும் வீடியோவில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது. வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com