தலைவாழை: பச்சைப்பயறு மாங்காய் சுண்டல் | Pachaipayiru Maangai Sundal

Share

தொகுப்பு: எஸ்.கே.ரமேஷ்

மயக்கும் மாங்காய் சமையல்

மாங்காய்க்கு மயங்காதோர் உண்டோ! சேலம் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ருசியான மாம்பழம்தான். உணவில் மாங்காய், மாழ்பழத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சேலத்துக்காரர்கள். மாங்காய், மாம்பழத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளைச் செய்யக் கற்றுத் தருகிறார் கிருஷ்ணகிரி மேகலசின்னம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. ஜெயலட்சுமி.

பச்சைப்பயறு மாங்காய் சுண்டல்

என்னென்ன தேவை?

பச்சைப்பயறு – 200 கிராம், துருவிய மாங்காய் – 2, துருவிய தேங்காய் – சிறிதளவு, சின்ன வெங்காயம் – 5 நறுக்கியது, பச்சை மிளகாய் – 2 நறுக்கியது, கடுகு, உளுந்து பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய், கொத்தமல்லி – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் பச்சைப் பயற்றை வறுத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு, வறுத்த பச்சைப்பயற்றைப் போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, உளுந்து, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

பச்சை வாசனை போனவுடன் வேகவைத்துள்ள பச்சைப்பயறு சேர்த்துக் கிளறுங்கள். சில நிமிடங்களுக்குப் பிறகு மாங்காய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறுங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com