தமிழ்நாட்டு வியாபாரிகள் குஜராத் சென்று வேர்க்கடலை விதைகளை வாங்குவது ஏன்?

Share

தமிழ்நாடு - குஜராத், வேர்க்கடலை விதைகள்

பட மூலாதாரம், Jamnagar APMC

படக்குறிப்பு, ஜாம்நகர் ஏ.பி.எம்.சியில் ஏலத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு வியாபாரிகள்

குஜராத்தில் உள்ள வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) கிடங்கு, விவசாயிகள் விற்க கொண்டு வந்த நிலக்கடலையால் நிரம்பி வழிகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேர்க்கடலையின் சந்தை விலை, மவுண்ட் (Maund – தோராயமாக 20 கிலோ) ஒன்றுக்கு ரூ.70 குறைந்துள்ளது. ஆனால், குஜராத் ஜூனாகத் கிரவுண்ட்நட் 9 (ஜிஜேஜி-9) மற்றும் காதிரி-6 எனும் இரு வேர்க்கடலை ரகங்களுக்கு அதிக சந்தை விலை கிடைத்துள்ளது. இதற்கு காரணம், தமிழ்நாட்டு வியாபாரிகள் அதிகளவில் இந்த இரு ரகங்களையும் அதிக விலைக்கு வாங்குகின்றனர்.

தமிழ்நாடு - குஜராத், வேர்க்கடலை விதைகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எந்தெந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வாங்குகின்றனர்?

வேர்க்கடலை பயிர் பெரும்பாலும் மூன்று முதல் நான்கு மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும்.

“தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மூன்று பருவங்களில் வேர்க்கடலைகளை பயிரிடுகின்றனர். ஒன்று காரி பருவம் (ஜூன்), காரி பருவத்திற்கு பிந்தைய பருவம் (செப்டம்பர் -அக்டோபர்) மூன்றாவது ராபி பருவம் (டிசம்பர்-ஜனவரி) ஆகிய பருவங்களில் பயிரிடுகின்றனர்” என, ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் ராஜேஷ் மடாரியா கூறுகிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com