தமிழ்நாடு அரசியல்: அதிமுக, பாஜகவுக்கு 2022 கொடுத்த சோதனை

Share

அ.தி.மு.க

தற்போது முடிவுக்கு வரவிருக்கும் 2022ஆம் ஆண்டு, மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழ்நாட்டை இதற்கு முன்பு ஆட்சி செய்த அதிமுகவுக்கும் மிகுந்த சோதனையான ஆண்டாகவே அமைந்து விட்டது. இந்தக் கட்சிகள் என்னென்ன விதத்தில் பின்னடைவுகளைச் சந்தித்தன?



கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியடைந்தது, அந்த இரு கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவு என்றாலும் கூட, 2022ஆம் ஆண்டில் நடந்த பல நிகழ்வுகள், அதிமுகவையும் பாஜகவையும் மிகவும் பலவீனமாக காட்சியளிக்கச் செய்தன.


ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், இந்த வருட துவக்கத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்தியது தமிழ்நாடு அரசு. பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன.


இந்தத் தேர்தல்களில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய மூன்று மட்டங்களிலும் தி.மு.க பெரும் வெற்றியைப் பெற, அ.தி.மு.கவும் பாஜகவும் படுதோல்வியடைந்தன. குறிப்பாக அதிமுகவின் வாக்கு சுமார் 25 சதவீதம் என்ற அளவுக்குக் குறைந்தது. பாஜகவும் இந்தத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.


இந்த தேர்தல் தோல்வி தந்த பின்னடைவிலிருந்து அதிமுக வீழ்வதற்கு முன்பாக, அந்த கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்தன.

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் ஒரே தலைமையாக மாற நினைத்தார். ஆனால், இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் தரப்பு விரும்பியது.

பிளவுக்கு தயாரான தலைமைகள்

நீறுபூத்த நெருப்பாக கட்சிக்குள்ளேயே நிலவிய முரண்பாடு, ஜூன் மாத வாக்கில் மெல்லமெல்ல வெளியில் வர ஆரம்பித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com