தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

Share

பவன் கல்யாண், ஜனசேனா, தமிழ்நாடு அரசியல், தெலுங்கு பேசும் மக்கள், தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள் தொகை,  மொழி அரசியல், பிரஜா ராஜ்யம் கட்சி, சிரஞ்சீவி, தேசிய ஜனநாயக கூட்டணி, உதயநிதி, திமுக, சனாதனம்

பட மூலாதாரம், janasenaparty/fb

ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சென்னையில் ஒரு நாடு ஒரு தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதற்கு முன்பும் அவர் தமிழக அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

சென்னை திருவான்மியூரில் தமிழக பா.ஜ.க. நடத்திய ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்க கூட்டத்தில் ஜன சேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் பங்கேற்றார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர், தி.மு.கவை விமர்சித்தார். “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நானும் தென் மாநிலத்தை சேர்ந்தவன்தான். என்னால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஹிந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரங்களில் சில கவலைகள் இருக்கலாம். அதைப் போக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பவன் கல்யாண், ஜனசேனா, தமிழ்நாடு அரசியல், தெலுங்கு பேசும் மக்கள், தமிழ்நாட்டில் தெலுங்கு மக்கள் தொகை,  மொழி அரசியல், பிரஜா ராஜ்யம் கட்சி, சிரஞ்சீவி, தேசிய ஜனநாயக கூட்டணி, உதயநிதி, திமுக, சனாதனம்

பட மூலாதாரம், janasenaparty

தமிழ்நாடு அரசியல் குறித்து பவன் கல்யாண் கருத்துத் தெரிவிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்து தீவிரமான கருத்துகளை அவர் தெரிவித்திருக்கிறார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com