தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் மழை – பள்ளிகளுக்கு விடுமுறை – படத்தொகுப்பு

Share

காணொளிக் குறிப்பு,

சென்னையில் கனமழை: இன்னொரு வெள்ளத்தை தலைநகர் தாங்கத் தயாராக உள்ளதா?

தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் பிற மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்திருந்த நிலையில், எதிர்பார்த்தது போலவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரு தினங்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால், சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மழை நிலவரத்தை பிரதிபலிக்கும் சில புகைப்படங்களின் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்.

பட மூலாதாரம், @ChennaiRains

படக்குறிப்பு,

சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள பிருந்தாவன் நகரில் தேங்கியுள்ள மழை நீர்

படக்குறிப்பு,

சென்னை புதுப்பேட்டை குடியிருப்பு வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீர்

வடகிழக்கு பருவமழையையொட்டி அரக்கோணம், சென்னை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 அணிகள் மீட்பு நடவடிக்கைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதில் 13 அணிகள் அரக்கோணத்திலும் மற்ற இரு அணிகளில் தலா ஒன்று சென்னை மற்றும் நீலகிரியில் உள்ளதாகவும் என்டிஆர்எஃப் படையணியின் கமாண்டன்ட் அருண் தியோகம் தெரிவித்துள்ளார்.

மழை தொடர்ந்து பெய்த போதிலும் சென்னை நகரில் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com