தமது சுயநலத்திற்காக அதிமுகவை இபிஎஸ் அழிக்க பார்க்கிறார்: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

Share

தஞ்சை: எடப்பாடி பழனிசாமி யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துகொண்டு தமது சுயநலத்துக்காக அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதுமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வி.கே.சசிகலா அங்கு வருகை தந்த அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைத்திலிங்கம் இந்த சந்திப்பு எதார்த்தமான ஒன்றாகும். அரசியல் ரீதியான சந்திப்பு என்றால் பத்திரிக்கையாளர்களுடன் தெரிவித்துதான் சந்திப்போம் என கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி எப்படி அரசியலுக்கு வந்தார், எப்படி முதல்வர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் என சாடிய வைத்திலிங்கம் ஈபிஎஸ் அதிமுகவை அபகரிக்க துடிக்கிறார் என்றும் அவரது ஆணவப் போக்குக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.

மூத்த நிர்வாகிகள் ஆர்.என்.வீரப்பன், ஏ.ஜெ.சண்முகம், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அதிமுக இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதில் ஓபிஎஸ் உடன் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். அதில் சசிகலாவும் தினகரனும் அடங்குவார்கள் எனவும் அவர் கூறிப்பிட்டார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com