தன்பாலினத்தவர்களுக்கு திருமண உரிமை கிடைத்தால் அவர்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும்?

Share

தன்பாலின திருமணம், இந்தியா, உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Reuters

தன்பாலின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டபூர்வமாக்கக் கோரிய மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையின் முதல் நாளில், தனி நபர் சட்டத்தைக் கருத்தில் கொள்ளாமல், சிறப்புத் திருமணச் சட்டத்தின் மூலம் தன்பாலின சேர்க்கையாளர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுமா என்பதை ஆராய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

மறுபுறம், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, அரசியலமைப்பின் 14, 19 மற்றும் 21 வது பிரிவுகளில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் கீழ், திருமணம் செய்து கொள்ள உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.

சிறப்புத் திருமணச் சட்டம், 1954 மூலம், சாதி மற்றும் மதக் கலப்புத் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com