ஒருவேளை, 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் கேப்டனாக விளையாடும் பட்சத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக அவர் ஓய்வுபெற்றால் துணைக் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் கேப்டனாவாரா, இல்லை வேறொருவர் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்பது விவாதப்பொருளாக இருக்கிறது.
காரணம், அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் இருக்கிறது. இந்த நிலையில், ஒருநாள், டி20 அணி கேப்டன் பதவிக்கு தன்னுடைய சாய்ஸ் யார் என்தை இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊடக நிகழ்ச்சியொன்றில் பேசிய கபில்தேவ், “என்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியாதான் எனது ஒயிட் பால் (ODI, T20) கேப்டன். கேப்டன் பதவிக்கு நிறைய போட்டியாளர்கள் இருந்தாலும் எனது விருப்பம் பாண்டியாதான்.
ஒப்பீட்டளவில் பாண்டியா இளமையாக இருக்கிறார். அடுத்தடுத்த ஐ.சி.சி தொடர்களுக்கு அவரை மையப்படுத்தி ஒரு அணியை உருவாக்க முடியும். அதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் ஆடவேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாததால், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு நிறைய கேப்டன்கள் தேவைப்படும்” என்று கூறினார்.
ரோஹித்துக்குப் பிறகு இந்திய அணியை யார் வழிநடத்துவார் என்பது குறித்து உங்களுடைய கருத்தை கமெண்ட்டில் பதிவிடவும்!