தஞ்சாவூர்: `முதல்வர் ஸ்டாலின் மனு வாங்கவில்லை’ – சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் | farmers protest that CM stalin did not met them

Share

தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலை முனியாண்டவர் கோயில் அருகே முதல்வர் செல்லும் போது மனு கொடுப்பதற்காக விவசாயிகள் காத்திருந்தனர். ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் வருகைக்காக காத்திருந்தனர். தாங்கள் மனு கொடுக்கும் விபரத்தையும் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள், காவல்துறையினரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் முதல்வர் கார் நிற்கவில்லை மனுக்களும் வாங்கவில்லை.

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் ஸ்டாலின்

தஞ்சாவூர் நிகழ்ச்சியில் ஸ்டாலின்

இதையடுத்து மனு வாங்காமல் போனதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், “டெல்டாவில் குறித்த நேரத்தில் ஆறு, பாசன வாய்க்கால், ஏரி உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும். மதகுகள், தடுப்பணைகள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். பருவம் தவறிய மழையால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com