தக்காளி விலை கேட்டு தலை சுற்றுகிறதா..? கவலை வேண்டாம்.. தக்காளி இல்லாத இந்த சுவையான கார சட்னி செய்து பாருங்கள்.!

Share

நம் பாரம்பரிய சமையலில் தக்காளி இல்லாத ரெசிபியை தேடி தேடி செய்வது மிகவும் சிரமம். மேலும் சட்னி என்றால் அனைவரும் தேங்காய் சட்னியை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டோருக்கு டிஃபனுக்கு காரச் சட்னி இருந்தே ஆகவேண்டும். தக்காளி விலையை கண்டு பயந்து பிடிக்காத சட்னி அரைத்து சாப்பிடாமல், இந்த சுவையான தக்காளி இல்லாத கார சட்னியை எப்படி எளிதாக அரைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு- 3 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 3
  • பூண்டு – 15 முதல் 20 பல் பூண்டு
  • காய்ந்த மிளகாய் – 4
  • கஷ்மீரி மிளகாய் – 4
  • புளி – சிறிய உருண்டை
  • உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க :

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 1
  • கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தேவைக்கேற்ப

செய்முறை :

  • ஒரு கடாயை பற்ற வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாகிய பின் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • உளுத்தம் பருப்பு நன்கு பொந்நிறமான பின்னர் வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் புளி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்கவும்
  • நன்கு வதக்கிய பின் ஆற வைத்த பின் மிக்ஸியில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும்
  • பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் மாற்றியபின் தாளித்து எடுத்தால் தக்காளி சேர்க்காத அருமையான கார சட்னி ரெடி.
  • Also Read | முட்டையை அதன் சுவை மாறாமல் எப்படி சமைக்கனும் தெரியுமா..? அவசியம் இதை படியுங்கள்..!

    குறிப்பு :

    இந்த சட்னியில் வதக்கும்பொழுது வேண்டுமென்றால் தக்காளி சேர்த்து கூட வதக்கி கொள்ளலாம். அப்படி தக்காளியை சேர்க்கும் பட்சத்தில் புளி சேர்க்க தேவையில்லை.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com