தகிக்கும் காரைக்குடி தம்பிகள்! சிதறும் வாக்குகள்…குஷியில் மதுரை தி.மு.க! | கழுகார் அப்டேட்ஸ் | kazhugar updates on mayor MLA issue and karaikkudi NTK issue

Share

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே எதிர்பார்ப்பில், ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளும் காரைக்குடியில் களமிறங்கி வேலையை ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால், உள்ளூரில் கோஷ்டி பூசல் களைக்கட்டுவதால் தடுமாறிப் போயிருக்கிறார்களாம் தம்பிகள். ‘மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்கும் இரண்டு பிரமுகர்களுக்கு இடையே, நீயா… நானா.. கோஷ்டி மோதல் உச்சமடைந்துள்ளது. மாவீரர் நாள் நிகழ்வுகளை, லோக்கலிலுள்ள கட்சி நிர்வாகிகள்தான் வழக்கமாக நடத்துவார்கள். ஆனால், காரைக்குடியிலுள்ள இரண்டு பிரமுகர்களும் எதிரும் புதிருமாக இருப்பதால், வேறு வழியில்லாமல் சென்னையிலுள்ள முன்னணி நிர்வாகிகளே முன்னின்று நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்தப் பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவராமல், எவ்வளவு பெரிய வியூகத்தை வகுத்தாலும் அது பலனளிக்கப்போவதில்லை. இந்தப் பிரச்னையின் தீவிரத்தை சீமான் புரிந்துகொண்டால்தான், வெற்றியடைய முடியும்’ என்கிறார்கள் நா.த.க சீனியர்களே!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com