டொனால்ட் டிரம், ஈலோன் மஸ்ட் இடையே என்ன பிரச்னை? விரிசல் சரியாகுமா?

Share

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், மைக் வெண்ட்லிங்
  • பதவி, பிபிசி நியூஸ்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது முன்னாள் ஆலோசகர் ஈலோன் மஸ்க் இடையே தற்போது வெளிப்படையான பிளவு ஏற்பட்டுள்ளது.

டிரம்பின் முக்கிய உள்நாட்டுக் கொள்கைகளில் ஒன்றை ஈலோன் மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவரும் ஒருவரையொருவர் அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இரண்டு கோடீஸ்வரர்களான அமெரிக்க அதிபர் டிரம்பும், மஸ்க்கும் வியாழக்கிழமை முழுவதும் தங்களுக்குச் சொந்தமான சமூக ஊடக தளங்களில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர்.

அதையடுத்து, ஒன்றாக இருந்த அவர்களின் கூட்டணி, தற்போது கசப்பான முடிவை நெருங்கி வந்துள்ளதாகத் தெரிகிறது. தனது நிர்வாகத்தின் முக்கியமான வரி மற்றும் செலவுத் திட்டத்தை மஸ்க் விமர்சித்ததைத் தொடர்ந்து, “அவரால் ஏமாற்றமடைந்தேன்” என்று டிரம்ப் கூறினார். இது அவர்களின் “நல்லுறவை” முடிவுக்குக் கொண்டு வருமா என்ற கேள்வியும் எழுந்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com