டெல்லி: தெரு நாய் தாக்கி சகோதரர்கள் பலியான சோகம் – 5, 7 வயதுடைய குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்! | Two siblings, aged 7 and 5, killed in suspected stray dog attack in Delhi’s Vasant Kunj

Share

இந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று, ஆனந்தின் தம்பி ஆதித்யா தன் உறவினர் சாந்தனுடன் (24) அவசரத் தேவைக்காக அதே காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். சந்தன் சிறுவனை சிறிது நேரம் விட்டுவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே ஆதித்யாவை தெருநாய்கள் சூழ்ந்து தாக்கியிருக்கிறது. உடனே சாந்தனு சிறுவனை மீட்டு வந்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

ஆனால், மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர்களின் உறவினர் ஒருவர்,”ஆனந்தின் இறுதிச் சடங்குகளில் குடும்பத்தினர் பிஸியாக இருந்த நேரத்தில் ஆதித்யா தாக்கப்பட்டிருக்கிறார். தெருநாய்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அது தொடர்பான பிரச்னைகளை யாரும் கண்டுகொள்ளவில்லை” என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு மகன்களையும் இழந்து வாடும் அவர்களின் பெற்றோர்களின் கதறல் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com