டெரோசார்: 18 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினம் என்ன சாப்பிட்டது?

Share

டெரோசார்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, ‘டோரிக்னாதஸ்’ உயிரினத்தின் மாதிரிப் படம்

வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்ந்த பறக்கும் ஊர்வனங்கள் எதனை உண்டு உயிர்வாழ்ந்தன என்பது சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ‘டெரோசார்’ எனப்படும் இந்தப் பறக்கும் ஊர்வனங்கள், சிறிய மீன்கள் மற்றும் கணவாய் மீன்களை உண்டு உயிர் வாழ்ந்தன என்று அந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியாளர் ராய் ஸ்மித், புதைபடிவங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த விலங்கினத்தின் வயிற்றுப் பகுதியின் எச்சங்கள், அவற்றின் உணவு முறைகளுக்கு உறுதியான சான்றாக விளங்குகிறது என்கிறார்.

இந்த ஆராய்ச்சியை, ஜெர்மனியில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள மாநில இயற்கை அருங்காட்சியகமும் இணைந்து நடத்தின. இதன் கண்டுபிடிப்புகள் ‘ஜர்னல் ஆஃப் வெர்டிபிரேட் பேலியோண்டாலஜி’ இதழில் வெளியிடப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com