டெபிட், கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டுக்கு அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்: அவை உங்களை பாதிக்குமா?

Share

கார்டு

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள ‘டோக்கனைசேஷன்’ எனும் புதிய விதி அக்டோபர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான ஆன்லைன் பண பரிவர்த்தனையில் மாற்றங்கள் அமலாகவுள்ளன.

ரிசர்வ் வங்கியின் புதிய டோக்கனைசேஷனுக்கான விதிகளை உருவாக்குவதற்கான காலக்கெடு ஜூலை 1ஆம் தேதி என வகுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல பெரிய வணிக நிறுவனங்கள் ‘கார்டு-ஆன்-ஃபைல்’ எனும் டோக்கனைசேஷன் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது வரை 19.5கோடி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

என்ன சொல்கிறது ரிசர்வ் வங்கியின் புதிய விதி?

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் பண பரிவர்த்தனையின்போது பயனாளர்களின் கார்டு விவரங்களைச் சம்மந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனங்கள் சேமித்துக்கொள்ள கடந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விதித்த ரிசர்வ் வங்கி, டோக்கனைசேஷன் எனும் நடைமுறையைக் கட்டாயமாக்கியது.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனையின்போது ‘கார்டு-ஆன்-ஃபைல்’எனப்படும் கார்டு எண், கார்டின் காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விவரங்களை பல நிறுவனங்கள் சேமித்து வந்தன. பயனாளர்களின் பரிவர்த்தனை வசதியை எளிமைப்படுத்துவதற்காக இவை சேமிக்கப்பட்டாலும் பல தளங்களில் இத்தகைய விவரங்கள் சேமிக்கப்படுவதால் கார்டு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும், திருடப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்ப்பதற்காக டோக்கனைசேஷன் என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்திருக்கிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com