டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே உலக சாதனை: 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசிய சிக்கந்தர் ராசா | Zimbabwe World Record in T20 Cricket Sikandar Raza hits 43 balls 133 runs

Share

நைரோபி: டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று தொடரில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது ஜிம்பாப்வே. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அணி என்ற சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, 43 பந்துகளில் 133 ரன்கள் விளாசினார்.

கென்யாவின் நைரோபியில் உள்ள ருவாரகா ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் புதன்கிழமை (அக்.23) நடைபெற்ற ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் காம்பியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்தது. தடிவானாஷே 19 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். பிரையன் 50, கிளைவ் 53, ரியான் 25 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசாவின் ஆட்டம் ஹைலைட்டாக அமைந்தது. 43 பந்துகளில் 133 ரன்களை அவர் ஸ்கோர் செய்தார். 7 ஃபோர்கள் மற்றும் 15 சிக்ஸர்களை அவர் விளாசினார். 33 பந்துகளில் அவர் சதம் விளாசி இருந்தார். ஜிம்பாப்வே அணி 27 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தது. 20 ஓவர்களில் 344 ரன்களை ஜிம்பாப்வே குவித்தது.

345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை காம்பியா விரட்டியது. 14.4 ஓவர்களில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அந்த அணி. அந்த அணியில் ஆண்ட்ரே என்ற வீரரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்த ஆட்டத்தை 290 ரன்களில் வென்றது ஜிம்பாப்வே. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டிலும் சதம் விளாசிய ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை சிக்கந்தர் ராசா படைத்துள்ளார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com