டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

Share

டி20 உலகக்கோப்பை, இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

பட மூலாதாரம், ANI

நடப்பு டி20 உலகக் கோப்பையில் பிப்ரவரி 15ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“இந்த விஷயங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன், இது குறித்து பிசிசிஐயிடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை. எல்லாம் ஐசிசியிடம் உள்ளது. ஐசிசி எந்த முடிவை எடுத்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.” என்று அவர் பதிலளித்தார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாடப் போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் கூற்றுப்படி, வங்கதேசத்துக்கு ஆதரவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாகபாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வங்கதேசம் இந்தியாவில் விளையாட மறுத்தது. தாங்கள் விளையாட வேண்டிய போட்டிகள் நடைபெறும் இடங்களை மாற்றக் கோரியது.
அதனை நிராகரித்துவிட்ட ஐசிசி, இந்த தொடரில் இருந்து வங்கதேசத்தை விலக்கி, ஸ்காட்லாந்து அணியை சேர்த்தது.

இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பாக நிலவும் முட்டுக்கட்டையைத் தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவும் ஞாயிற்றுக்கிழமை லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வியை சந்தித்துப் பேசியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com