டிரெஸ்ஸிங் ரூமில் ஆட்டம் போட்ட பாகிஸ்தான் வீரர்கள்- வைரல் வீடியோ

Share

இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியின் கடைசி நேர பதற்றங்களையும், பிறகு வெற்றி கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தும் பாகிஸ்தான் வீரர்களின் வீடியோ வைரலானது.

அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டது, 19-வது ஓவரில் 19 ரன்கள் விளாசியது பாகிஸ்தான் அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்த்து கேப்டன் ரோகித் சர்மா, அந்த ஓவரை அவருக்கு வழங்கினார். ஆனால், அவர் நினைத்தற்கு மாறாக கள நிலவரம் இருந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவர் ஆட்டத்தில் திருப்பு முனை ஏற்படுத்தியது.

ஆனால் அவரே தன் கடைசி ஓவரை வீசியபோது 19 ரன்களை எடுத்த பாகிஸ்தான் அணி, வெற்றிக்கு மிக அருகில் சென்றது. கடைசி ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் வீரர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கடைசி நேர வீடியோவை வெளியிட்டுள்ளது:

பாகிஸ்தான் வீரர்கள், டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றத்துடன் ஒவ்வொரு பந்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு ரன் மற்றும் ஒரு ரன்கள் களத்தில் இருந்த வீரர்கள் எடுத்தபோது கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். கடைசியில் வெற்றி இலக்கு ரன்களை எடுத்தவுடன் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான், சதாப் கான் ஆகியோர் துள்ளிக்குதித்து வெற்றியைக் கொண்டாடினர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com