டிரம்ப்: அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை – காரணம் என்ன?

Share

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 400,000 க்கும் மேற்பட்ட ஆவணமற்ற மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித் துறையின் குடியேற்றம் தொடர்பான தளம் கூறுகிறது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அதிக எண்ணிக்கையிலான மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது குறித்து கவலைகள் எழுந்துள்ள நிலையில், டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்பதற்கு முன் சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வளாகத்திற்குத் திரும்புமாறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மின்னஞ்சல் அனுப்புகின்றன.

” சர்வதேச மாணவர்கள் அனைவரும் இப்போது கவலையுடன் உள்ளனர்” என்று கொலராடோ டென்வர் பல்கலைக்கழக பேராசிரியர் சோலி ஈஸ்ட் பிபிசியிடம் கூறினார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், வரலாற்றில் மிகப்பெரிய மக்கள் வெளியேற்ற நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் இதற்கு அமெரிக்க ராணுவ உதவியை பயன்படுத்துப்போவதாகவும் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com