அதிக கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகளை உருவாக்கி தமனிகள் வழியே உள்ளுறுப்புகளுக்கு போதுமான ரத்தம் பாய்வதை கடினமாக்குகிறது. இந்த கொழுப்பு படிவுகள் திடீரென உடைந்து மாரடைப்பு அல்லது பக்கவாதத்தை ஏற்படுத்த கூடும். மருந்துகள், ஆரோக்கியமான உணவுகள் மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகியவை அதிக கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். உங்களுக்கு ஹைகொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பின் டார்க் சாக்லேட் இதனை கட்டுப்படுத்த உதவும். டார்க் சாக்லேட் சாப்பிடுவது எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பின் அளவை குறுகிய காலத்தில் குறைப்பதாக European Journal of Clinical Nutrition- இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறுகையில், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் டார்க் சாக்லேட் நுகர்வு முக்கிய பங்கு வகிப்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் டார்க் சாக்லேட்டில் சேர்க்கப்பட்டிருக்கும் கோகோ பவுடரில் இருக்கும் பாலிபினால்ஸ் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன.
நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில், டார்க் சாக்லேட் உட்கொள்வதால் நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவில் ஏற்படும் தாக்கத்தை பற்றி கூறி இருக்கிறார். அந்த போஸ்ட்டில், டார்க் சாக்லேட் கேடசின்ஸ் (catechins) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்டின் சிறந்த மூலமாகும். அதே போல ரத்த கொழுப்பின் ஆக்ஸிடேஷனை தடுக்கவும், ரத்தம் உறைவதற்கான போக்கை குறைக்கவும் கோகோ உதவ கூடும் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. என்றாலும் டார்க் சாக்லெட்டை மிதமாகவே எடுத்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
70% டார்க் சாக்லேட் போன்ற கோகோ டெரிவேடிவ்களில் அதிக அளவு பாலிபினால்ஸ் உள்ளன. இவை நல்ல கொழுப்பின் (HDL) அளவை உயர்த்துவதன் மூலம் மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு காரணமாகின்றன. ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதோடு இதய நோய் அபாயத்தையும் குறைக்கின்றன என குறிப்பிட்டு உள்ளார் அஞ்சலி முகர்ஜி. cocoa பவுடரை விட Cacao பவுடரை பயன்படுத்துவது நல்லது, ஏனெனில் இதில் பாலிஃபீனால்ஸ் அதிகம் உள்ளதாகவும் கூறி இருக்கிறார். Cacao என்பது cocoa-வின் மூலம் மற்றும் பதப்படுத்தப்படாத வெர்ஷனாகும். இது cocoa-வை விட சற்று வித்தியாசமான மற்றும் கசப்பு சுவை கொண்டதாக இருக்கும்.
செயற்கை இனிப்பு சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்குமா..? ஆய்வு
உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க விரும்பினால்..
ஒரு கப் பாதாம் பாலில் 2 டீஸ்பூன் பச்சை Cacao பவுடரை கலக்கவும். சுவைக்கு ஏற்ப 2 டீஸ்பூன் தேங்காய் கிரீம் மற்றும் சிறிது ஸ்டீவியா அல்லது மாங்க் ஃப்ரூட் சேர்த்து கொள்ளலாம். சுவையை அதிகரிக்க வேண்டும் என்றால் தேன் அல்லது வெல்லம் சேர்த்து கொள்ளலாம். இந்த Cacao பவுடர் மிக்ஸை தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறை எடுத்து கொள்வது இதய நோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.