டயப்பர் அணிந்து பள்ளிக்கு செல்லும் 11 வயது மாணவர்கள்; பெற்றோர்களே கவனம் தேவை! |11-Year-Old Children Wearing Diapers To School

Share

11 வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு டயாப்பர் அணிந்து வருவதைக் குறித்து, ஆசிரியர்கள் வருத்தமும் கவலையும் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும்போது அல்லது சில சமயங்களில் வீட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பதுண்டு. அந்தக் குழந்தை வளர்ந்து `எனக்கு பாத்ரூம் போக வேண்டும்’ என சொல்லும்வரை குழந்தைகளைப் பெற்றோர்கள் இவ்வாறு பழக்குவார்கள்.

பள்ளி போகும் வயதை எட்டிய பின்னும் பாய் , படுக்கை விரிப்புகளில் கழிந்துவிட்டால் அவ்வளவு தான், அம்மாவின் அடியைத் தாண்டி, அண்ணன், அக்காவின் கேலி கிண்டலுக்கு உள்ளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பாத்ரூம் சென்று வரும் பிள்ளைகளும் உண்டு. அதுவே பள்ளி பயிலும் வயதிலும், ஸ்கூலுக்கு போகும் குழந்தைகள் டயாப்பர் அணிந்தால் பிரச்னைதான்.

சுவிட்சர்லாந்து ஆசிரியர்கள் இந்தச் சவாலைத் தான் எதிர்கொண்டு வருகிறார்கள். `பள்ளிக்கூடத்திற்கு வரும் அதிக குழந்தைகள் இப்போதெல்லாம் டயாப்பர் அணிந்து வருகின்றனர். 11 வயதைத் தொட்ட குழந்தைகள்கூட டயாப்பர் அணிந்து வருவது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளனர். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com