எடை குறைக்க வேண்டுமானால் உடற்பயிற்சி அவசியம் என்றிருந்தாலும் கூட முதலில் கட்ட வேண்டியது வாயைத் தான். ஒரு எடை குறைப்பு முயற்சியில் உடற்பயிற்சி 20% மட்டுமே பயனளிக்கும். மீதமுள்ள 80% நாம் சாப்பிடும் உணவுகளை வைத்தே பயன் தரும். ஆனால் டயட் உணவுகள் என்றாலே காரசாரமாக சாப்பிட்டு பழகிப்போன நம் நாக்கிற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் உள்ளது. ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி, சட்னி, சாம்பார், உப்புமா போன்ற உணவுகளில் சிலசில மாற்றங்கள் செய்தாலே நம்மால் நாக்கிற்கு கஷ்டம் கொடுக்காமல் திருப்தியாக டயட் இருக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் என்னென்ன என்ற சில ஐடியாக்களைக் கொண்டதே இந்த தொகுப்பு.
டயட் உணவுகளை சாப்பிட்டு நாக்கு செத்துபோச்சா.? இந்த காரசாரமான உணவுகளை ட்ரை பண்ணி பாருங்க..
Share