ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

Share

  • வினீத் கரே
  • பிபிசி செய்தியாளர், டெல்லி

ஞானவாபி மசூதி
படக்குறிப்பு,

ஞானவாபி மசூதி

சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் பி.வி.நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தல மசோதாவை (சிறப்பு விதிகள்) கொண்டு வந்தபோது, நாட்டில் ராமர் கோயில் இயக்கம் உச்சத்தில் இருந்தது.

1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மதம் சார்ந்த ஒரு இடத்தின் நிலை எப்படி இருந்ததோ, அதற்குப் பிறகும் அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும், அதன் தன்மையும், இயல்பும் மாறாது என்றும் அதே ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

1991-ம் ஆண்டு நரசிம்மராவ் அரசில் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணையமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதை நினைவு கூர்கிறார்.

“அயோத்தி பழைய வழக்கு, அது குறித்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்துவருகிறது. எனவே நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று நரசிம்மராவ் முடிவு செய்தார். எல்லா தாவாக்களையும் ஒரே நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் இயற்றப்பட்டது. இந்த வழியில் சட்டத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டன.”

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com