ஜோஷிமட் – மண்ணுக்குள் புதையும் நகரம்: 20 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியுமா?

Share

உத்தராகண்ட் ஜோஷிமட்

பட மூலாதாரம், Getty Images

உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர்.

உடனடியாக அந்த வீட்டில் இருந்து தனது 11 குடும்ப உறுப்பினர்களையும், சேதமடையாமல் இருந்த இரண்டு அறைகளுக்கு மாற்றினார், குடும்பத் தலைவரான பிரகாஷ் பூட்டியால். சிறிய அளவில் விரிசல் இருக்கும் அந்த இரண்டு அறைகளில் தான் மொத்த குடும்பமும் இப்போது வரை தங்கியுள்ளது.

ஜோஷிமட்டில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், PRAKASH BHOTHIYAL

“நாங்கள் தூக்கத்தை தொலைத்து, பின்னிரவு வரை விழித்து இருக்கிறோம். ஒரு சிறிய ஒலி கூட பயத்தை உருவாக்குகிறது. அவசரம் ஏற்பட்டால் எப்படி தப்பித்து வெளியே செல்வது என்ற சிந்தனையுடன் தான் படுக்கைக்கு செல்கிறோம்,” என பூட்டியால் கூறுகிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com