ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்கத் தவறினால் அபராதம்… | தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை! Penalty for failure to prescribe generic drugs

Share

அனைத்து மருத்துவர்களும் ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிப்பதுடன், அவர்களுக்கான ‘லைசென்ஸ்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று, தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.

எச்சரித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்!

இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், `இந்தியாவில் சுகாதாரத்திற்கான செலவில் பெரும் பகுதியை மக்கள் மருந்து, மாத்திரைகளுக்காகச் செலவிடுகின்றனர். இதைக் குறைக்க, மக்களுக்கு ஜெனரிக் மருந்துகளையே டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். பிராண்டடு மருந்துகளைவிட ஜெனரிக் மருந்துகள் 30 முதல் 80 சதவிகிதம் வரை விலை மலிவானவை. எனவே ஜெனரிக் மருந்துகளைப் பரிந்துரைப்பதன் மூலம் மக்களின் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கலாம். இதன்மூலம் அதிகளவு டோஸ் உள்ள மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

இதை மீறுவோருக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பிறகு பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு உத்தரவிடப்படும். அதையும் மீறித் தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால், டாக்டராக பணியாற்றுவதற்கான லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். காப்புரிமை இல்லாமல் விற்கப்படும் மருந்துகளைப் பரிந்துரை செய்யக்கூடாது. மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com