ஜெகதீப் தன்கர் பதவி விலகும் முன்பாக கடைசியாக என்ன செய்தார்?

Share

ஜெகதீப் தன்கர்

பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்வதற்கு முன்பு நாள் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். (கோப்புப் படம்)

ஜெகதீப் தன்கர் துணைக் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து திங்கட்கிழமை மாலையில் விலகினார். உடல்நலக் காரணங்களுக்காக இந்த முடிக்கு வந்ததாக அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கூறுகிறார்கள்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு எழுதிய கடிதத்தில், உடனடியாக பதவி விலக விரும்புவதாக ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமா செய்வதற்கு முன்பு, ஜெகதீப் தன்கர் வழக்கமான முறையில் மாநிலங்களவை துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com